உத்தரகண்ட் மாநிலத்தில் 30 க்கும் மேற்பட்ட பறவைகள் திடீரென உயிரிழப்பு.!

உத்தரகண்ட் மாநிலத்தில் 30 க்கும் மேற்பட்ட பறவைகள் திடீரென உயிரிழப்பு.!

உத்தரகண்ட்: ரிஷிகேஷ் மாவட்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு இடங்களில் 30 க்கும் மேற்பட்ட பறவைகள் இறந்து கிடந்தன. எய்ம்ஸ், ரிஷிகேஷ் வளாகத்தில் இருபத்தி எட்டு காகங்கள் மற்றும் ஒரு புறா இறந்து கிடந்தன.

மேலும், ஒரு சில பறவைகள் பீஸ் பிகா வட்டாரத்தில் இருந்தும், இரண்டு ரைவாலா நிலையத்திலிருந்தும் இறந்துள்ளதாக அரசு கால்நடை அதிகாரி ராஜேஷ் ரதுரி தெரிவித்தார்.

இந்நிலையில், உயிரிழந்த பறவைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு  நடவடிக்கைகளுக்காக வனத்துறைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மரணம் குறித்து ரிஷிகேஷ் மாவட்ட நகராட்சி ஆணையர் நரேந்திர சிங் குரியால், தேவைப்பட்டால்  இறைச்சி விற்பனைக்கு தற்காலிக தடையும் பொது நலனில் விதிக்கப்படலாம் என்றார்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.
Join our channel google news Youtube