உத்தரகண்ட் மந்திரி ராமாயண நகலை சீனாவின் ஜி ஜின்பிங்கிற்கு அனுப்பியுள்ளார்!

விரிவாக்க மனப்பான்மையை சுட்டி காட்டி உத்தரகாண்ட்டின் மந்திரி ராமாயண

By Rebekal | Published: Jul 08, 2020 01:43 PM

விரிவாக்க மனப்பான்மையை சுட்டி காட்டி உத்தரகாண்ட்டின் மந்திரி ராமாயண நகல் ஒன்றை சீனாவின் ஜி ஜின்பிங் அவர்களுக்கு அனுப்பியுள்ளார்.

உலகம் முழுவதும் கொரானா வைரஸ் பரவி வரும் நிலையில் சீனா தனது எல்லையை விரிவாக்குவற்காக சில முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்நிலையில், உத்தரகண்ட் மந்திரி அவர்கள் சீனாவுக்கு ராமாயண நகல் ஒன்றை அனுப்பி கொரானா வைரஸை எதிர்த்துப் போராடுவதற்கு மக்கள் தங்கள் பணத்தை செலவழிக்கும் படி செய்யுங்கள். விரிவாக்கதிற்காக மக்கள் பணத்தை பயன்படுத்த வேண்டாம் என்று கூறி உள்ளார்.

மேலும் சீனாவின் உகைன் நகரில் தோன்றிய கொரானா வைரஸ் தான் உலகையே தற்பொழுது அழித்து வருகிறது. அதற்கு நீங்கள் உதவுவீர்கள் என்று நினைத்தோம். இந்த ராமாயணத்தை படித்து பாருங்கள், அதில் ராவணனை போன்ற வலிமை மிக்க மனிதண் எங்கும் இருந்ததில்லை. ஆனால் அதே இராவணன் பத்துத் தலை இருப்பதாக கூறப்பட்டாலும், அவரது விரிவாக்க மனப்பான்மையால் அவன் முடிவு துரதிஷ்டவசமானது, எனவே நேர்மையாகவும் பொதுநலன் கருதியும் யோசியுங்கள் என்று கூறியுள்ளார்.

Step2: Place in ads Display sections

unicc