உத்தரகண்ட் மாநிலத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பு – உத்தரகண்ட் அரசு

உத்தரகண்ட் மாநிலத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பு – உத்தரகண்ட் அரசு

உத்தரகண்ட் மாநிலத்தில் ஜூன் மாதம் 1 ஆம் தேதிவரை ஊரடங்கு நீட்டிப்பு…உத்தரகண்ட் அதிரடி அறிவிப்பு.

இந்தியாவில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடிவரும் நிலையில், ஆங்காங்கே உயிரிழப்புகளும் நாளுக்கு நாள் உச்சத்தை எட்டி வருகிறது. இந்த பேரழிவு காலத்தை சரிசெய்ய மத்திய மாநில அரசுகள் பல கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. இந்த சூழலில் மாநில அரசுகள் முழு ஊரடங்கை அமல்படுத்தி கொரோனாவை கட்டுப்படுத்திவருகிறது.

இதனையடுத்து உத்தரகண்ட் மாநிலத்தில் கொரோனா தொற்று அதிகரிப்பு காரணமாக கேபினட் அமைச்சர் சுபோத் யூனியல் தற்போதுள்ள ஊரடங்கை சில தளர்வுகளுடன் ஜூன் மாதம் 1 ஆம் தேதிவரை நீட்டிப்பதாக இன்று அறிவித்துள்ளார். மேலும் அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் காலை 8 மணி முதல் 11 மணி வரை திறந்திருக்கும் என்றும், மேலும் மே 28 அன்று, அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக பொதுமக்கள் காலை 8 மணி முதல் நண்பகல் வரை பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Join our channel google news Youtube