உத்திரப்பிரதேசம்: மாப்பிள்ளைக்கு ‘2 ஆம் வாய்ப்பாடு’ தெரியாததால் திருமணத்தை நிறுத்தியப் பெண்..!!

உத்திரப்பிரதேசம் மாநிலத்தில்,மாப்பிள்ளைக்கு 2 ஆம் வாய்ப்பாடு தெரியாததால்,திருமணத்தை பாதியிலேயே மணமகள் நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரப்பிரதேசத்தின் தவார் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு திருமண ஏற்பாடு செய்யப்படிருந்தது.எனினும்,மாப்பிளையின் கல்வித் தகுதி குறித்து மணப்பெண் சந்தேகம் கொண்டிருந்தாள்.இதனையடுத்து கடந்த மே 3 ஆம் தேதி நடைபெற்ற திருமணத்தில்,மாலை மாற்றிக்கொள்ள இருந்த சில நிமிடங்களுக்கு முன்பு,மணமகள் 2 ஆம் வாய்ப்பாடை சொல்லுமாறு மணமகனிடம் கேட்டுக்கொண்டார். ஆனால்,மணமகன் வாய்ப்பாடை சொல்ல தவறிவிட்டார்.

இதனால் அந்த மணப்பெண்,”2 ஆம் வாய்ப்பாடு கூட தெரியாத ஒருவரை எப்படி திருமணம் செய்ய முடியும்” என்று கூறி  திருமணத்தை பாதியிலேயே நிறுத்தி விட்டு மண்டபத்திலிருந்து வெளியேறினார்.

இதுகுறித்து,மணமகளின் உறவினர் ஒருவர் கூறுகையில்,”மணமகனின் குடும்பம் அவரது கல்வியைப் பற்றி எங்களிடம் சரியாகக் கூறவில்லை.  எனவே,மணமகனின் குடும்பத்தினர் எங்களை ஏமாற்றிவிட்டார்கள். ஆனால்,எனது துணிச்சலான சகோதரி சமூகம் என்ன சொல்லுமோ என்று அஞ்சாமல் துணிச்சலாக வெளியேறி விட்டார்,” என்று  கூறினார்.

இதனையடுத்து,கிராமத்தின் முக்கிய நபர்கள் தலையிட்டு இரு வீட்டரையும் சமரசம் செய்து,மணமகன் மற்றும் மணமகள் குடும்பத்தினர் இருவரும் தாங்கள் பெற்ற பரிசுகளையும் நகைகளையும் ஒருவருக்கொருவர் திருப்பி கொடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினர்.

இதனைத் தொடர்ந்து,மாப்பிள்ளைக்கு 2 ஆம் வாய்ப்பாடு தெரியாததால் திருமணத்தை பாதியிலேயே மணமகள் நிறுத்திய சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.