15 மாவட்டங்களை தனிமைப்படுத்திய உத்திர பிரதேச அரசு.!

கொரோனா வைரஸ் தொற்று நாடுமுழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இதுவரை 5 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில்,உத்திர பிரதேச அரசு, நொய்டா, லக்னோ, காசியாபாத், மீரட், ஆக்ரா, கான்பூர், வாரணாசி, ஷாம்லி, பிரெய்லி, புலன்சாகர், பிரோசாபாத், மகாராஜ்கானி, சித்தபூர், சஹாரன்பூர், பஸ்தி ஆகிய 15 மாவட்டங்களை தனிமைப்படுத்தியுள்ளது. இந்த மாவட்ட மக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா தொற்று அதிகமாவதை தடுக்கபடும் என கூறப்படுகிறது. 

இதுவரை உத்திர பிரதேச மாநிலத்தில் 343 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 3 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளார். 

author avatar
மணிகண்டன்
நான் மணிகண்டன், இளங்கலை பொறியியல் பட்டதாரியான நான் , கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அரசியல், சினிமா, விளையாட்டு மற்றும் உலக செய்திகள் ஆகியவற்றை எழுதி வருகிறேன்.