அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு… ஒருவர் பலி, 9 பேர் காயம்.!

By

US Shooting

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் பலி மற்றும் 9 பேர் காயமடைந்துள்ள சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் செயின்ட் லூயிஸ் நகரத்தில் நள்ளிரவு 1 மணிக்கு டவுன்டவுனில் ஒரு பார்ட்டி நடைபெற்றுக் கொண்டிருந்த கட்டிடத்திற்குள், துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. இந்த துப்பாக்கிச்சூட்டில் 17 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் உயிரிழந்ததாக மேயர் திஷாரா ஜோன்ஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் 17 வயது சந்தேக நபர் ஒருவர் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என்று காவல்துறைத் தலைவர் ராபர்ட் ட்ரேசி தெரிவித்தார் என சிஎன்என் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து மேயர் திஷாரா ஜோன்ஸ் கூறும்போது, துப்பாக்கி கலாச்சாரத்தால் இளம் வயதினர்கள் தங்கள் உடல் மற்றும் மன ரீதியிலான காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர், மேலும் பெற்றோர்களுக்கு வேதனையை ஏறப்டுத்தியுள்ளனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் 15 முதல் 19 வயத்துக்குட்பட்டவர்கள் என்றும் மேயர் ஜோன்ஸ் தெரிவித்தார். சம்பவ இடத்தில் இருந்து AR-15 ரக துப்பாக்கி மற்றும் ஒரு கைத்துப்பாக்கி உட்பட பல துப்பாக்கிகளை போலீசார் மீட்டனர். கட்டிடத்தின் உரிமையாளர்கள் யார், மற்றும் பார்ட்டிக்கு யார் பொறுப்பு என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.