உலகக்கோப்பை தொடரில் காயம் காரணமாக உஸ்மான் கவாஜா விலகல் !

உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலிய அணி  தனது கடைசி லீக் போட்டியை தென்னப்பிரிக்கா அணியுடன் கடந்த 6-ம் தேதி விளையாடியது. இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின்  முன்னணி பேட்ஸ்மேனான உஸ்மான் கவாஜா 18 ரன்களுடன் வெளியேறினார்.  இப்போட்டியில் உஸ்மான் கவாஜாவிற்கு தொடையில் காயம் ஏற்பட்டது.

இந்த காயம் குணமடைய அதிக நாள்கள் தேவை என்பதால் உலகக்கோப்பை தொடரில் இருந்து உஸ்மான் கவாஜா விலகி உள்ளார்.இந்நிலையில் உஸ்மான் கவாஜா விலகியதை தொடர்ந்து அணியில் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட் உஸ்மான் கவாஜா பதிலாக சேர்க்கப்பட்டு உள்ளார்.

மேலும் ஆஸ்திரேலிய அணி நாளை  இங்கிலாந்து அணியுடன்  அரையிறுதி போட்டியில் விளையாட உள்ளது. உஸ்மான் கவாஜா அணியில் இருந்து விலகியது பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.

 

author avatar
murugan