குழாய் நீரை இனி கழிவறைக்கு மட்டும் உபயோகப்படுத்துங்கள் – அமெரிக்கா எச்சரிக்கை!

குழாய் நீரை இனி கழிவறைக்கு மட்டும் உபயோகப்படுத்துங்கள் என அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

குழாய் நீரில் உயிரை கொல்லக்கூடிய அமீபா இருப்பதால், பொது நீர் வினியோகம் மூலம் மக்களுக்கு அளிக்கப்படும் நீரையும் குழாய் நீரையும் அப்படியே குடிக்க வேண்டாம் என அமெரிக்க அரசு அந்நாட்டு மக்களுக்கு அறிவுறுத்தி உள்ளது. அமெரிக்கா டெக்ஸாஸில் உள்ள 8 நகரங்களில் சுற்றுச்சூழல் தரம் குறித்து வெளியிடப்பட்டுள்ள ஆலோசனையில், குழாய் நீரில் இருந்து வரக்கூடிய தண்ணீரில்  நைக்லீரியா ஃபோலெரி மூளை உண்ணக்கூடிய அமீபா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ஒரு சிறுவனின் மூளையினை இந்த அமீபா உண்டதால் அந்த சிறுவன் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மக்கள் குழாய் நீரை பயன்படுத்தலாம் ஆனால் கழிவறைக்கு மட்டும் அதை பயன்படுத்த வேண்டுமென அரசாங்கத்தால் கூறப்பட்டுள்ளது. மேலும் மழை பெய்யும் பொழுதும் குளிக்கும்பொழுது மூக்கிற்குள் தண்ணீர் செல்ல விடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் எனவும், நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்கள்,  குழந்தைகள் வயதானவர்கள் ஆகியோர் குழாய் நீரை எதற்கும் பயன்படுத்த வேண்டாம் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த அமீபா தாக்குதலுக்குட்பட்டவர்கள் குறைந்தது ஒரு வாரத்திற்குள் இறப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
author avatar
Rebekal