நரம்பு தளர்ச்சி நீங்க பயன்படுத்துங்கள் நீர் பிரம்மி..! நாட்டு மருத்துவம்..!

நீர் பிரம்மி:

நீர் பிரம்மி செடியில் ஆல்கலாய்டுகளும், குளுக்கோசைடுகளும் உள்ளன. இவை உடலுக்கு ஆரோக்கியம் அளிப்பதுடன் நோயிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது.

நினைவாற்றலைத் தூண்ட:
நீர் பிரம்மி இலைகளை நிழலில் உலர்த்தி பொடி செய்து அதனுடன் தேன் கலந்து தினமும் காலை வேளை சாப்பிட்டு வந்தால் நினைவாற்றல் பெருகும்.

நரம்பு தளர்ச்சி நீங்க:
நீர் பிரம்மி இலையை நிழலில் உலர்த்தி கஷாயம் தயார் செய்து அருந்தினால் நரம்பு தளர்ச்சி மற்றும் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். மேலும் சிறுநீர் பெருக்கம் ஏற்படும்.


தொண்டை கரகரப்பு குணமாக:
நீர் பிரம்மி இலையை வெண்ணெயில் பொரித்து சாப்பிட்டு வந்தால் தொண்டை கரகரப்பு குணமாகும்.


கோழைக்கட்டு குணமாக:
நாீர் பிரம்மி வேரை அரைத்து நீர் சேர்த்து கொதிக்க வைத்து நெஞ்சில் தடவினால் கோழைக்கட்டு நீங்கும்.


வீக்கங்கள் கரைய:
நீர் பிரம்மி இலையை ஆமணக்கெண்ணெய் விட்டு வதக்கி வீக்கங்களின் மீது ஒற்றடமிட்டுஅதன்மீது வைத்துக் கட்டினால் வீக்கங்கள் கரையும்.


இத்தகைய மருத்துவக்குணங்களைக்கொண்ட நீர் பிரம்மி செடியை நாம் நம் உடல் ஆரோக்கியத்துக்காக பயன்படுத்துவோம். “நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்ற பழமொழிக்கு ஏற்ப வாழ்வோம்; வாழ்வில் வளம் பெறுவோம்.

author avatar
Dinasuvadu desk

Leave a Comment