கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட அமெரிக்க துணை அதிபரின் பெண் செய்தி தொடர்பாளர்!

கொரோனா பாதிப்பில் இருந்து மீண்ட அமெரிக்க துணை அதிபரின் பெண் செய்தி தொடர்பாளர் கேத்தி மில்லர். 

முதலில் சீனாவில் பரவிய கொரோனா வைரஸ் தொடர்ந்து பல நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில், கொரோனா பதிப்பில் முதலிடத்தில்  அமெரிக்காவில், இதுவரை, 1,725,275 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 100,572 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், மருத்துவமனையில் இருந்து சிகிச்சை பெற்று, 4 லட்சத்து 68 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வீடு திரும்பியுள்ளனர். 

இந்நிலையில், அமெரிக்க நாட்டின் துணை அதிபரான மைக் பென்ஸின், பெண் செய்தி தொடர்பாளராக கேத்தி மில்லர் என்பவர் பணியாற்றி வருகிறார். இதனையடுத்து, கேத்தி மில்லருக்கு கடந்த 8-ம் தேதி கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.  அதற்கு முந்தின நாள், டிரம்ப் நடத்திய இறைவணக்க நிகழ்ச்சியில் கேத்தி கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இதனை தொடர்ந்து, அவர் தனது ட்வீட்டர் பக்கத்தில், மில்லர் 2 வாரங்கள் வரை தனிமைப்படுத்தி கொண்டார்.  அவர் நேற்று மீண்டும் பணிக்கு திரும்பினார். 3 முறை கொரோனா வைரஸ் பரிசோதனையில் பாதிப்பு இல்லை என உறுதியானது.  அதனால் இன்று பணிக்கு திரும்பியுள்ளேன் என தெரிவித்து உள்ளார்.
 
கேத்தி மில்லருக்கு பாதிப்பு உறுதியானவுடன், வெள்ளை மாளிகை புதிய கொள்கைகளை அமலுக்கு கொண்டு வந்தது. என்னவென்றால், பணியாளர்கள் முக கவசங்களை அணிய வேண்டும் வலியுறுத்தப்பட்டனர். அதிபர் டிரம்ப் மற்றும் துணை அதிபர் பென்ஸ் ஆகியோர், கொரோனா பரிசோதனைகளை செய்து விட்டோம் என்று முக கவசம் அணிய மறுத்துள்ளனர். 
 
author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.