இந்தியாவிற்கு தடுப்பூசி உற்பத்திக்கு உதவி, அமெரிக்க ஜனாதிபதி அறிவிப்பு..!

இந்தியாவிற்கு தடுப்பூசி உற்பத்திக்கு உதவுவதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அறிவித்துள்ளார்.

உலக நாடுகளில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் பொருட்டு தடுப்பூசி போடும் பணி  விரைவாக நடந்து வருகிறது. மேலும், உலக நாடுகளில் கொரோனா பெருந்தொற்றுக்கு எதிராக போராடி வரும் நாடுகளுக்கு அமெரிக்கா பல்வேறு உதவிகளை செய்து வருகிறது.

அந்த வகையில் வெள்ளை மாளிகையில் அமெரிக்க ஜனாதிபதி இது குறித்து பேசியதாவது, உலகம் முழுவதும் பல நூறு கோடி கொரோனா தடுப்பூசி தேவைப்படுகிறது. இதில் 50 கோடி கொரோனா தடுப்பூசிகளை அமெரிக்கா வழங்குவதாக உறுதி செய்துள்ளது.

இதனை அடுத்து இந்தியா போன்ற நாடுகளுக்கு கொரோனா தடுப்பூசி உற்பத்தி திறனை வழங்கவும் அமெரிக்கா முயற்சித்து வருகிறது. இது இலவசமாக வழங்கப்படும். நாங்கள் எதையும் இதற்காக வசூலிக்கவில்லை. நாங்கள் எங்களால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம்.

இதுவரை மற்ற நாடுகளை விட அமெரிக்கா கொரோனா தடுப்பூசிகளை கூட்டு உலகளாவிய முயற்சியில் அதிக அளவில் வழங்கியுள்ளோம். மேலும், இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளிடம் எங்கள் கூட்டாண்மை மூலமாக தடுப்பூசி உற்பத்தி செய்ய கூடிய முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.