US Election 2020 LIVE: அமெரிக்க மக்களுக்கு கிடைத்த வெற்றி ஜோ பைடன் 264 , டொனால்ட் ட்ரம்ப் 214

Nov 5- 8.39: அமெரிக்க மக்களுக்கு கிடைத்த வெற்றி எண்ணிக்கை முடிந்ததும் நாங்கள் வெற்றிகரமாக வெளிப்படுவோம் என்று நான் நம்புகிறேன்.ஆனால் இது எனது வெற்றியாக மட்டும் இருக்காது.இது அமெரிக்க மக்களுக்கு கிடைத்த வெற்றியாக இருக்கும் என ஜோ பைடன் தெரிவித்துள்ளார் .

Nov 5- 8.07: சதவீதத்தில் முந்தும் ஜோ பைடன்  எடிசன் ரிசர்ச் நிறுவனம் நடத்திய ஆய்வில் , அரிசோனா மாகாணத்தில் மாநிலத்தில் இதுவரை மதிப்பிடப்பட்ட மொத்த  வாக்குகளின் எண்ணிக்கை 86%, இதில் டிரம்ப் 47.9% மற்றும் ஜோ பைடன் க்கு 50.7% வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளது .

Nov 5- 1:30 AM: பத்திரிகையாளர் சந்திப்பு அமெரிக்க நேரப்படி பிற்பகல் 3:30 மணிக்கு பிலடெல்பியாவில் பத்திரிகையாளர் சந்திப்பை  டிரம்ப் நடத்த இருப்பதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

Nov 4- 6:06: வழக்கை சந்திக்க தயார்: வாக்குகள் என்னும் பணியை நிறுத்த நீதிமன்றம் செல்வேன் என டிரம்ப் தெரிவித்துள்ள நிலையில், உச்சநீதிமன்றம் சென்றால் வழக்கை சந்திக்க தயார் என பைடன் அதிரடியாக பதிலளித்துள்ளார்.

Nov 4- 5:15: தேர்தல் முடிவுகள் தாமதம்: அரிசோனா, ஜார்ஜியா, உட்பட 7 மாகாணங்களில் தொடர்ந்து இழுபறி நிலவும் நிலையில், தேர்தல் முடிவுகளில் தாமதம் ஏற்படும் என தகவல்கள் வெளியானது.

Nov 4- 4:20: வாக்கு எண்ணும் பணி நிறுத்திவைப்பு: பென்சில்வேனியா, ஜார்ஜியா, மிக்சிகன், விஸ்கொன்ஸிஸ் ஆகிய மாகாணத்தில் வாக்கு எண்ணும் பணிகள் நிறுத்துவைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியானது.

Nov 4- 1:46: முன்னிலையை தக்கவைக்கும் பைடன்: அதிபர் தேர்தல் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், தற்பொழுது வரை ஜோ பைடன் 236 சபை வாக்குகளும், டொனால்ட் டிரம்ப் 213 சபை வாக்குகளும் பெற்று முன்னிலையை பைடன் தக்கவைத்துள்ளார்.

Nov 4- 1:40: அரிசோனா மாகாணத்தை கைப்பற்றிய பைடன்: 1948 ஆம் ஆண்டு முதல் குடியரசு கட்சியின் கோட்டையான அரிசோனா மாகாணத்தில் ஜோ பைடன் வெற்றிபெறுள்ளார்.

Nov 4- 1:36: அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் இந்திய வம்சாவளிகள்: அமெரிக்க பிரதிநிதிகள் சபைக்கு ஜனநாயக கட்சியின் வேட்பாளர்களான இந்திய வம்சாவளியை சேர்ந்த Dr.அமி பெரா, பிரமீலா ஜெயபால், ரோ கண்ணா மற்றும் ராஜா கிருஷ்ணமூர்த்தி ஆகிய 4 பேரும் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Nov 4- 1:26: வெற்றியை நிர்ணயிக்கும் இழுபறி மாகாணங்கள்: அரிசோனா, ஜார்ஜியா, மிச்சிகன், நெவாடா, வட கரோலினா, பென்ஸில்வேனியா, விஸ்காஸின் ஆகிய மாகாணங்களில் தேர்தல் முடிவுகள் இழுபறியில் உள்ளன.

இதில் அரிசோனா, நெவாடா ஆகிய 2 மாகாணங்களில் பைடன் முன்னிலையில் உள்ள நிலையில், எஞ்சிய ஜார்ஜியா, மிச்சிகன், வட கரோலினா, பென்ஸில்வேனியா, விஸ்காஸின் ஆகிய 5 மாகாணங்களில் டிரம்ப் முன்னிலையில் உள்ளார்.

Nov 4- 1:16: பின்னடைவை சந்திக்கும் டிரம்ப்?: பென்சில்வேனியா, மிக்சிகன், விஸ்கான்சின் ஆகிய மாகாணத்தில் முடிவுகள் இன்னும் வெளிவராத காரணத்தினால், வாக்கு எண்ணிக்கைகளை நிறுத்தப்போவதாக டிரம்ப் தனது உரையில் தெரிவித்துள்ளார்.

பென்சில்வேனியா, உட்பட 3 மாகாணத்தில் டிரம்ப் முன்னிலையில் உள்ள நிலையில், தபால் வாக்குகளை எண்ண ஆரமித்தால், டிரம்ப் பின்னடைவை சந்திப்பார் என தகவல்கள் வெளியானது. மேலும், தேர்தல் முடிவும் வரை இந்த தபால் வாக்குகளை எண்ணப்போவதில்லை என கூறியது, குறிப்பிடத்தக்கது.

Nov 4- 1:08: நீதிமன்றத்தை நாடுவோம் – டிரம்ப் உரை: 

வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், வெள்ளை மாளிகையில் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவர், பைடனால் என்னை வெற்றி கொள்ள முடியாது என பேசி வரும் அவர், எதிர்பாராத மாகாணங்களில் கூட வெற்றி கிடைத்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும், அதிபர் தேர்தலில் மிகப்பெரிய மோசடி நடப்பதாக குற்றம்சாட்டி வரும் அவர், வாக்குகள் என்னும் பணியை நிறுத்த நீதிமன்றம் செல்வேன் என தெரிவித்துள்ளார்.

Nov 4- 12:30: பென்சில்வேனியாவில் டிரம்ப் முன்னிலை: பென்சில்வேனியா மாகாணத்தில் 57.0 வாக்குகளை பெற்று அதிபர் டிரம்ப் முன்னலையில் உள்ளார். பைடன், 42.2 வாக்குகளை பெற்றுள்ளார்.

Nov 4- 12:07: ட்ரம்பின் கருத்துக்கு ட்விட்டர் எச்சரிக்கை: தேர்தல் முடிவுகளில் எதிர்க்கட்சி சதி செய்ய நினைப்பதாக டிரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த நிலையில், தேர்தல் நடத்தை விதிகளை மீறிவிட்டதாக டிரம்ப் பதிவிட்ட கருத்துக்கு ட்விட்டர் நிர்வாகம் எச்சரிக்கை.

Nov 4- 11:56: டெக்ஸாஸில் டிரம்ப் முன்னிலை: டெக்ஸாஸ் மாகாணத்தில் டிரம்ப், 52.3 சதவீத வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். மேலும் பைடன், 46.2 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார்.

Nov 4- 11:50: முன்னேறும் டிரம்ப்: தற்பொழுது வரை ஜோ பைடன் 223 சபை வாக்குகளும், டொனால்ட் டிரம்ப் 212 சபை வாக்குகளும் பெற்று டிரம்ப் முன்னேறி வருகிறார்.

Nov 4- 11:42: புளோரிடா மற்றும் லோகா மாகாணத்தில் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

Nov 4- 11:36: இது வாக்காளர்களின் இடம் – பைடன்: நாங்கள் எங்கு இருக்கிறோம் என்பதைப் பற்றி நாங்கள் நன்றாக உணர்கிறோம். மேலும், இந்தத் தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பாதையில் நாங்கள் இருப்பதாக நம்புகிறோம் எனவும், இந்தத் தேர்தலில் வெற்றியாளரை அறிவிக்க இது எனது இடமோ டிரம்பின் இடமோ அல்ல. இது வாக்காளர்களின் இடம் என்றும் பைடன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Nov 4- 11:24: கைக்கெட்டும் தூரத்தில் வெற்றி- டிரம்ப்: வெற்ற கைக்கெட்டும் தூரத்தில் உள்ளது. தேர்தல் முடிவுகளில் எதிர்க்கட்சி சதி செய்ய நினைப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டினார். மேலும், நாங்கள் அதனை செய்ய விட மாட்டோம். தேர்தல் முடிந்த பின் வாக்களிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

Nov 4- 11:20: பைடன் செய்தியாளர் சந்திப்பு: அதிபர் தேர்தலில் வெற்றி நம்பிக்கை உள்ளதாகவும், அதுவரை ஆதரவாளர்கள் அமைதியாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Nov 4- 11:15: முக்கிய மாநிலமான டெக்சாஸில், 38 இடங்களை கைப்பற்றி ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

Nov 4- 11:08: மினசோட்டா மாகாணத்தில் ஜோ பைடன், 55.1 சதவீத வாக்குகள் பெற்று வெற்றிப் பெற்றுள்ளார்.

Nov 4- 11:04: ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பைடன், இன்னும் சற்று நேரத்தில் தேர்தல் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்திக்கவுள்ளார்.

Nov 4- 10:26: டொனால்ட் டிரம்ப் டெக்சாஸ் மாகாணத்தில் 38  எலக்டோரல் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

Nov4 – 10:30: தற்பொழுது வரை ஜோ பைடன் 223 சபை வாக்குகளும், டொனால்ட் டிரம்ப் 148 சபை வாக்குகளும் பெற்று பைடன் முன்னிலையில் உள்ளார்.

Nov 4-09:53 : மிசிசிப்பி மாகாணத்தில் 11 எலக்டோரல் வாக்குகள் பெற்று டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றுள்ளார்.

Nov4 – 9:44: உலகமே எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோபிடன் இடையே கடும் போட்டி நிலவுகிறது.இதில் தற்பொழுது வரை ஜோபிடன் 209 இடங்களிலும் டொனால்ட் டிரம்ப் 112 இடங்களிலும் முன்னிலை பெற்றுள்ளார். அமெரிக்கா தேர்தலை பொறுத்தவரை மொத்தம் உள்ள 538 தேர்தல் சபை ஓட்டுகளில் 270 ஓட்டுகளை பெற்றால் தான் வெற்றி பெற முடியும் .

கொரோனாவை கையாண்ட முறையில் டொனால்ட் டிரம்ப்பின் மீது மக்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளது .இதுவரை 2.5 லட்சத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் .இதன் வெளிப்பாடே டிரம்ப்க்கு சற்று பின்னடைவை தந்துள்ளது .தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பிலிருந்தே  ஜோபிடன் முன்னிலையில் இருந்து வருகிறார் .தற்பொழுதுவரை டிரம்ப்பை விட ஜோபிடன் 97 இடங்களில் முன்னிலை பெற்று ஏறக்குறைய வெற்றியின் விளிம்பை தொடப்போகிறார் .

Castro Murugan

Recent Posts

ராகுல்- டிகாக் கூட்டணியில் சரிந்த சிஎஸ்கே ! தொடர் வெற்றிக்கு முற்று புள்ளி வைத்த லக்னோ!

ஐபிஎல் 2024 : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ அணியும், சென்னை அணியும் மோதியது.' ஐபிஎல் தொடரில் இன்றைய 34-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியும்,…

5 hours ago

ஆர்வமுடன் களமிறங்கிய வாக்காளர்கள்… கடந்த முறையை விட எகிறும் எண்ணிக்கை.?

Election2024 : தமிழகத்தில் 7 மணி நிலவரப்படி 72.09 % வாக்குகள் பதிவாகியுள்ளது. கடந்த 2019 தேர்தலில் மொத்தமாக 72.44 % வாக்குகள் பதிவாகியது. 21 மாநிலங்களில்…

7 hours ago

மாற்றத்துடன் பேட்டிங் களமிறங்கும் சென்னை அணி !! பந்து வீச தயாராகும் லக்னோ !!

ஐபிஎல் 2024: ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் தற்போது டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது. ஐபிஎல் தொடரில் இன்றைய போட்டியில் லக்னோ…

9 hours ago

நிறைவடைந்தது தேர்தல் நேரம்…! டோக்கன் கொடுத்து வாக்குப்பதிவு தீவிரம்….!

Election2024: தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தற்போது நிறைவடைந்துள்ளது. ஜனநாயக திருவிழாவான நாடாளுமனற்ற மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவு தமிழகம் மற்றும்…

10 hours ago

துப்பாக்கிச்சூடு… EVM மிஷின் சேதம்… முடிந்தது மணிப்பூர் முதற்கட்ட தேர்தல்.!

Election2024 : மணிப்பூர் மாநிலத்தில் வாக்குப்பதிவு நிறைவு பெற்றது. மணிப்பூர் மாநிலத்தில் உள்ள உள் மற்றும் வெளி மணிப்பூர் என இரு மக்களவை தொகுதிகளில் பல்வேறு பகுதிகளுக்கு…

10 hours ago

ரிஷப் பண்ட் பார்ம் எப்படி இருக்கு? ஜாகீர் கான் சொன்ன பதில்!

Rishabh Pant : ரிஷப் பண்ட்  சமீபத்திய பார்ம் எப்படி இருக்கிறது என்ற கேள்விக்கு  ஜாகீர் கான் சமீபத்திய பேட்டி ஒன்றில் பதில் அளித்துள்ளார். டெல்லி கேப்பிட்டல்ஸ்…

10 hours ago