#BREAKING: அமெரிக்காவின் கொரோனா தடுப்பூசி 95% வெற்றி.!

அமெரிக்கா கொரோனா தடுப்பு மருந்து 95% வெற்றிகரமாக செயல்படுவதாக அறிவித்துள்ளது.

அமெரிக்க நிறுவனமான மாடர்னா இன்க் நிறுவனம் தயாரித்து வரும் கொரோனா தடுப்பூசி 95% பலன் தருவதாக அந்த நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் பான்செல் அறிவித்துள்ளார்.

இதற்கிடையில், கடந்த மாதம் இந்த தடுப்பூசி சோதனையின் இடைக்கால முடிவுகளை அந்நிறுவத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீபன் பான்செல் எதிர்பார்த்திருந்த நிலையில் இன்று வெற்றி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்நிலையில், 30,000 க்கும் மேற்பட்ட தன்னார்வலர்களிடம் நடத்தபட்ட முதற்கட்ட பரிசோதனையின் படி, கொரோனாவை கட்டுப்படுத்துவதில் 95% பலன் தருவதாகவும் இந்த ஆண்டு இறுதியில் அமெரிக்க கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.

Leave a Comment