IFS முதன்மை தேர்வுக்கான அட்டவணை வெளியீடு..!

யு.பி.எஸ்.சி, ஐ.எஃப்.எஸ் முதன்மை தேர்வுக்கான அட்டவணை இன்று வெளியிடப்பட்டுள்ளது, தேர்வு எழுதுபவர்கள் கருப்பு நிற பேனாவை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

IFS இந்திய வன சேவைக்கான முதன்மை தேர்வு அட்டவணை இன்று தேர்வாணையம் தனது அதிகாரபூர்வ இணையத்தளமாகிய  https://upsc.gov.in/  -இல் வெளியிட்டுள்ளது. இணைய பக்கத்தில் வெளியிட்டுள்ள தகவலின் படி பிப்ரவரி 28 முதல் மார்ச் 7 வரை தேர்வுகள் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. காலியாக உள்ள 90 இடங்கள் நிரப்பப்பட வேண்டும் என தேர்வாணையத்தால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பின் படி, முதல்கட்டமாக நடைபெறும் தேர்வுகள் காலை 9 மணி முதல் 12 வரையும், இரண்டாம் கட்ட தேர்வுகள் பிற்பகல் 2 மணி முதல் 5 மணி வரையும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வு எழுதும் தேர்வர்கள் கருப்பு நிற பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும் எனவும், நீல நிறம், சிவப்பு நிறம் கொண்ட பேனாக்கள் உபயோகப்படுத்தக்கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பென்சில் மற்றும் மை பேனாக்கள் வைத்து எழுதவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal