இன்று வெளியாகும் “டிக்கிலோனா” படத்தின் அப்டேட்..!

சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள டிக்கிலோனா படத்தின் அணைத்து பாடல்களும் இன்று வெளியாகவுள்ளது. 

நடிகர் சந்தானம் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் யோகி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் டிக்கிலோனா. கேஜேஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இந்த படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடித்துள்ளார் .

இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், டிரெய்லர் கடந்தாண்டு வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பைப் பெற்றது. மேலும் இந்த படத்தில் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன், ஆனந்தராஜ், முனீஸ்காந்த், மொட்டை ராஜேந்திரன், யோகி பாபு, அனகா, ஷிரின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

இந்த படத்திலிருந்து கடைகியாக வெளியான பேர் வச்சாலும் வைக்காம’ என்ற பாடல் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வருகிறது. இதனை தொடர்ந்து, இந்த படத்தில் இடம்பெற்ற அணைத்து பாடல்களும் இன்று வெளியாகும் என்பதால் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்துள்ளார்கள்.

author avatar
பால முருகன்
நான் பாலா டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தால் கடந்த 2 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். சினிமா செய்திகள், விளையாட்டு செய்திகள், க்ரைம் செய்திகள், ஆகியவற்றை தினச்சுவடுக்காக அளித்து வருகிறேன்.