உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் , மாயாவதி பிரசாரம் செய்ய தடை விதித்தது -தேர்தல் ஆணையம்

12

உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் மாயாவதி ஆகியோர் மதத்தின் அடிப்படையில் பிரசாரம் செய்ததால் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் புகார் அடிப்படையில் அவர்களுக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் விடுத்தது.

ஆனால் அவர்களின் தரப்பில் இருந்து அளிக்கப்பட்ட விளக்கம் திருப்தி அளிக்காத வகையில் இருந்ததால்.

தேர்தல் ஆணையம் யோகி ஆதித்யநாத் நாளை காலை 6 மணியிலிருந்து 72 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை விதித்தது.மேலும்  மாயாவதி நாளை காலை 6 மணியிலிருந்து 48 மணி நேரம் பிரசாரம் செய்ய தடை விதித்தது.