SPB நினைவாக ஆந்திராவில் இசைப்பல்கலைக்கழகம் – சந்திரபாபு நாயுடு வேண்டுகோள்!

SPB நினைவாக ஆந்திராவில் இசைப்பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என சந்திரபாபு நாயுடு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தமிழகத்தில் உள்ள எம்.ஜி.எம் ஹெல்த்ஹேர் மருத்துவமனையில்  வந்த அவர், அதன் பின்பு உடல் நலக்குறைவால் கடந்த வெள்ளிக்கிழமை காலமானார் பிரபலமான பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியம். இந்நிலையில், அவர் பிறந்த இடமான ஆந்திரா மாநிலத்தில் உள்ள நெல்லூரில் அவரது நினைவாக இசை பல்கலைக்கழகம் அமைக்க வேண்டும் என மாநில அரசுக்கு முன்னாள் முதல் மந்திரியும் ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமாகிய சந்திரபாபு நாயுடு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டிக்கு எழுதியுள்ள கடிதத்தில், எஸ் பி பாலசுப்பிரமணியம் அவர்கள் தனது சிறந்த பண்புகளால் உலக அளவில் தெலுங்கு மக்களை பெருமைப் படுத்தி உள்ளார். எனவே அவர் நினைவாக நெல்லூர் நகரில் இசை பல்கலைக்கழகம் ஒன்றை அமைத்து அதில் அவரது வெண்கல சிலை நிறுவ வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், பாலசுப்பிரமணியம் பிறந்த தினத்தை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் எனவும் அவரது பெயரில் தேசிய விருது ஒன்றை நிறுவ வேண்டும் எனவும் சந்திரபாபு இந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

author avatar
Rebekal