7 போட்டிக்கு பிறகு களமிறங்கிய யுனிவர்ஸ் பாஸ்..!

இன்றைய 31-வது போட்டியில் பெங்களூர் Vs பஞ்சாப் அணிகள் மோத உள்ளது. இப்போட்டி ஷார்ஜா மைதானத்தில் நடைபெறவுள்ளது.  இந்த ஐபிஎல் தொடரில் கடந்த 7 போட்டிகளாக களமிறங்காமல் கெய்ல் இருந்தார். ஏன் கெய்லை இறக்கவில்லை என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வந்த நிலையில், இன்றை போட்டியில் கெய்ல் இடம்பெற்றுள்ளார்.

ஷார்ஜா  சிறிய மைதானமான என்பதால் கெய்லின் பவருக்கு அந்த மைதானம் தாங்குமா என்று தெரியவில்லை.? அதே நேரத்தில், 41 வயதான கிறிஸ் கெய்ல், இளம் வீச்சாளர்களின் வேகத்தையும் தாங்குவாரா..? என்பது இன்றைய போட்டியில் தெரியவரும்.

7 போட்டிகளில் பஞ்சாப் அணி 6 போட்டிகளில் தோல்வியை தழுவி உள்ளது.இனி உள்ள போட்டிகளில் வெற்றி பெற்று ப்ளே ஆஃப் சுற்றுக்கு பஞ்சாப் அணியை கொண்டு செல்ல கெய்ல் போன்ற வீரர்கள் தேவைப்படுகிறது.