மியான்மரில் வன்முறையால் 1,00,000 பேர் இடம்பெயர்வு – ஐ.நா. அதிர்ச்சி தகவல்.!

மியான்மரில் வன்முறையால் 1,00,000 பேர் இடம்பெயர்வு – ஐ.நா. அதிர்ச்சி தகவல்.!

  • மியான்மரில் வன்முறையால் 1,00,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தகவல்.
  • பொதுமக்கள் மீது பாதுகாப்புப் படையினரின் தாக்குதல்கள் நடத்தியதால்  அவர்கள் இடம் பெயர்வதற்கு காரணம் என கூறப்பப்படுகிறது.

ஐக்கிய நாடுகள் சபை செவ்வாயன்று மியான்மரின் கயா மாநிலத்தில் 1,00,000 மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள் மீது “பாதுகாப்புப் படையினரின் கண்மூடித்தனமான தாக்குதல்கள்” அவர்கள் இடம் பெயர்வதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் “மியான்மரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை அங்கு விரைவாக மோசமடைந்து வரும் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான நிலைமை குறித்து கவலை கொண்டுள்ளது” என்று மியான்மரில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதற்கிடையில், மியான்மர் முழுவதும் பரந்த அரசியல் நெருக்கடி தென்கிழக்கு ஆசிய நாடு முழுவதும் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மியான்மரின் உடல்நலம் மற்றும் கல்வி முறைகளில் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், குழந்தைகள் மீதான வன்முறையின் நீண்டகால விளைவுகள் குறித்தும் கவலைகள் எழுப்பப்பட்டுள்ளதாக ஐ.நா தெரிவித்துள்ளது.

Join our channel google news Youtube