#ஐ.நா அதிரடி- உலக பயங்கரவாதி டிடிபி தலைவன்!

#ஐ.நா அதிரடி- உலக பயங்கரவாதி டிடிபி தலைவன்!

பாகிஸ்தான்  தலிபான் தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) பயங்கரவாத அமைப்பின் தலைவன் நூர் வாலி மெஹ்சுத்தை உலகளவில் பயங்கரவாதியாக ஐ.நா அதிரடியாக அறிவித்துள்ளது.

அல்கொய்தா உடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கு நிதியளித்தல், சதித்திட்டம் தீட்டுதல் போன்ற செயல்பாடுகளில் தெஹ்ரிக்-இ-தலிபான் பாகிஸ்தான் என்கிற பயங்கரவாத கொடூர அமைப்புடன் ஈடுபட்டு உள்ளதாக ஐ.நா பாதுகாப்புக் குழு குற்றம் சாட்டி உள்ளது.

இந்த அமைப்புக்கு தடை விதித்தது உடன் அதன் தலைவர் நூர் வாலி மெஹ்சுத்தை உலக  பயங்கரவாதியாக அறிவித்துள்ளது.

ஜ.நா அறிவித்துள்ளதால் இனி பயங்கரவாதி  வெளிநாடுகளுக்கு பயணிக்க முடியாது;மட்டுமின்றி  அவனது சொத்துக்கள் அனைத்தும் முடக்கப்படுவதாகவும் பாகிஸ்தானில் நடந்த பல்வேறு பயங்கரவாத தாக்குதலுக்கு இந்த அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

மேலும் 2010ல் டைம்ஸ் சதுக்கத்தில் நடந்த குண்டு வெடிப்பு, அதே ஆண்டு பெஷாவரில் அமெரிக்க துணை தூதரகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் ஆகியவற்றிக்கு இவ்வமைப்பு பொறுப்பேற்றது.

இதனைத்தொடர்ந்து கடந்த 2011ம் ஆண்டு அல்கொய்தாவுடன் கொண்ட தொடர்பு மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் காரணமாக டிடிபி அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் அதன் தலைவர் நூர் வாலி தற்போது உலக பயங்கரவாதியாக அறிவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

author avatar
kavitha
Join our channel google news Youtube