RR vs DC : பந்து வீச்சில் மிரட்டிய உனட்கட்.., 147 ரன்கள் எடுத்த டெல்லி..!

டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 147 ரன்கள் எடுத்தனர்.

ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், இன்றைய போட்டியில் ராஜஸ்தான் அணியும், டெல்லி  அணியும் மோதி வருகிறது. இப்போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தனர்.

இதைத்தொடர்ந்து, டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக பிருத்வி ஷா, தவான் இருவரும் களமிறங்கினர். தொடக்க வீரர்கள் இருவருமே நிலைத்து நிற்கவில்லை பிருத்வி ஷா 2, தவான் 9 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். அடுத்து இறங்கிய ரகானே 8 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். இதனால் டெல்லி அணி 36 ரன்னில் 3 விக்கெட்டை பறிகொடுத்தது.

முதல் மூன்று விக்கெட்டையும் உனட்கட் பறித்தார். இதைத்தொடர்ந்து இறங்கிய ரிஷப் பண்ட் நிதானமாக விளையாடி அரைசதம் அடித்தார். அடுத்து இறங்கிய மார்கஸ் ஸ்டோய்னிஸ் வந்த வேகத்தில் ரன் எடுக்காமல் பெவிலியன் திரும்பினார். அடுத்தடுத்து இறங்கிய அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேற  இறுதியாக டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டை இழந்து 147 ரன்கள் எடுத்தனர்.

உனட்கட் 4 ஓவர் வீசி முதல் மூன்று முக்கிய விக்கெட்டுகளை பறித்து 15 ரன்கள் மட்டுமே கொடுத்தார். 148 ரன்கள் இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கவுள்ளது.

murugan
Tags: ipl2021RRvDC

Recent Posts

இனி உள்நாட்டு கிரிக்கெட் வீரரும் ரூ.1 கோடி சம்பாதிக்கலாம்!! அதிரடி திட்டம் போடும் பிசிசிஐ !

BCCI : உள்நாட்டில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடும் கிரிக்கெட் வீரர்களுக்கு சம்பள உயர்வு செய்ய பற்றி பிசிசிஐ திட்டமிட்டுள்ளதாக க்ரிக்பஸ் வலைத்தளம் தகவல் தெரிவித்துள்ளது. தற்போதைய பிசிசிஐ…

9 mins ago

ஹர்திக் இல்ல ..சந்தீப் உள்ள ..? இது புதுசா இருக்கே ..டி20 அணியை அறிவித்த சேவாக் !!

Sehwag : இந்த ஆண்டில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடருக்கான அவருக்கு புடித்த இந்திய அணியை விரேந்திர சேவாக் அறிவித்துள்ளார். இந்திய அணியின் முன்னாள்…

1 hour ago

தொழிலதிபரிடம் 5.2 கோடி மோசடி ..! திருட்டு கும்பலுக்கு வலை வீச்சு ..!

Invesment Scam : பெங்களூரில் தொழிலதிபர் ஒருவர் அதிநவீன ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் ரூ.5.2 கோடி இழந்துள்ளார். ஆன்லைன் பங்கு முதலீட்டின் மூலம் பல மோசடிகள்…

2 hours ago

ஒரு தடவை பட்டது போதாதா? பிளாப் இயக்குனருடன் மீண்டும் இணையும் விஜய் சேதுபதி!

Vijay Sethupathi : டிஎஸ்பி எனும் பிளாப் படத்தை கொடுத்த இயக்குனர் பொன் ராமுடன் விஜய் சேதுபதி மீண்டும் இணையவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகர் விஜய்…

2 hours ago

ப்ரோமோவே மிரட்டலா இருக்கு! புஷ்பா 2 முதல் பாடல் எப்போது ரிலீஸ் தெரியுமா?

Pushpa 2 : புஷ்பா 2 திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாகும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. புஷ்பா திரைப்படத்தின் முதல் பாகம் பெரிய வெற்றியை…

3 hours ago

6,244 பணியிடங்கள்… ஜூன் 9இல் குரூப் 4 தேர்வு.! TNPSCயின் முக்கிய தேர்வு தேதிகள் இதோ….

TNPSC Group 4 : டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஜூன் 9ஆம் தேதியன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தமிழகத்தில் லட்சக்கணக்கோர் எழுதும் மிக முக்கிய…

3 hours ago