இலங்கைக்கு எதிராக ஐநா மனித உரிமை மன்றத்தில் தீர்மானம்…! இலங்கைக்கு இந்தியா ஆதரவா…?

இலங்கையில், மனித உரிமை மீறப்படுவதாக கண்டனம் தெரிவித்து, இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி உள்ளிட்ட 6 நாடுகள், ஐநா மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

இலங்கையில், மனித உரிமை மீறப்படுவதாக கண்டனம் தெரிவித்து, இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி உள்ளிட்ட 6 நாடுகள், ஐநா மனித உரிமை மன்றத்தில் தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இதன் மீதான வாக்கெடுப்பு நாளை நடைபெறவுள்ளது. மனித உரிமை மன்றத்தில், 47 நாடுகள் இடம்பெற்றுள்ள நிலையில், இந்த தீர்மானத்தில், 24 நாடுகள் ஆதரவு தெரிவித்தால், தீர்மானம் வெற்றிபெறும்.

சீனா,  ரஷ்யா,பாகிஸ்தான், கியூபா உள்ளிட்ட நாடுகளின் தரவுடன் இந்த தீர்மானம் தோற்கடிக்கப்டும் என இலங்கை தரப்பில் கூறப்பட்டு வந்த நிலையில், இந்தியா மற்றும் சீன பிரதமர்களிடம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ஷே ஆதரவு கோரியிருந்தார். இதனையடுத்து, இந்திய அரசு இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்குமா? அல்லது எதிராக வாக்களிக்குமா? என்ற கேள்வி  எழுந்துள்ளது.

இதற்கிடையில், இலங்கை வெளியுறவு துறை செயலாளர், இந்தியா தங்களுக்கு ஆதரவு அளிப்பதாக உறுதியளித்துள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் இதுகுறித்து இந்தியா தரப்பில் எந்த எதிர்வினையும் தெரிவிக்கவில்லை எனது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.