ஐ.நா. சீனாவைப் பொறுப்பேற்க செய்ய வேண்டும் –  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

கொரோனா வைரஸ்  பரவலுக்கு ஐ.நா. சீனாவைப் பொறுப்பேற்க செய்ய வேண்டும் என்று  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் சீனாவில் இருந்து முதலில் பரவினாலும் அதிகம் பாதித்துள்ள நாடுகளில் அமெரிக்கா தான் முதலிடத்தில் உள்ளது.கொரோனா பரவிய ஆரம்ப காலத்தில் இருந்து அமெரிக்கா அதிபர் டிரம்ப் சீனா மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.குறிப்பாக,கொரோனா வைரஸ் சீனாவில் உள்ள ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது.கொரோனா வைரஸை சீனா வைரஸ் என்று அடிக்கடி குறிப்பிட்டு வந்தார்.கொரோனா குறித்து விசாரணை நடத்தப்படும் வேண்டும் அறிவித்தார்.அமெரிக்க அதிபரின் பேச்சுக்கு சீன அரசு கடும் கண்டனம் தெரிவித்தது.

உண்மைக்கு புறம்பான தகவலை அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறுவதாக சீனா தெரிவித்தது. ஆனால் உலகில் உள்ள பல்வேறு நாடுகளும் சீனாவில் கொரோனா குறித்து வெளிப்படை தன்மையான தகவல்கள் எதுவும் சரியாக வரவில்லை என்று குற்றச்சாட்டை முன்வைத்தது. அமெரிக்க அதிபரின் குற்றச்சாட்டுகள் குறித்து உலக சுகாதார அமைப்பு கூறுகையில்,சீனாவில் உள்ள ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்ற ஆதாரம் தந்தால் வரவேற்பதாக கூறியது. ஆனால் இதுவரை ஆதாரம் எதையும் அமெரிக்கா தரவில்லை என்று தெரிவித்தது.

இந்நிலையில்  அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் சீனா குறித்து பேசியுள்ளார். ஐ.நா பொதுச் சபையில் டிரம்ப் பேசுகையில், இரண்டாம் உலகப் போர் முடிவடைந்து ஐக்கிய நாடுகள் சபை நிறுவப்பட்ட 75 ஆண்டுகளுக்குப் பிறகு, நாங்கள் மீண்டும் ஒரு பெரிய உலகளாவிய போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். கண்ணுக்குத் தெரியாத எதிரியான சீனா வைரஸுக்கு எதிராக நாங்கள் கடுமையான போரை நடத்தியுள்ளோம். உலகம் முழுவதும் பரவ அனுமதித்ததற்கு சீனா பொறுப்பேற்க வேண்டும். கொரோனா வைரஸ்  பரவலுக்கு ஐ.நா. சீனாவைப் பொறுப்பேற்க செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.