உலகநாயகனின் பிறந்தநாள் ஸ்பெஷல்: இன்று வெளியாகிறது “கமல்ஹாசன் 232” பட டைட்டில்.!

உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் பிறந்தநாள் ஸ்பெஷலாக கமல்ஹாசன் 232 படத்தின் டைட்டிலை அறிவிக்கும் டீசரை இன்று மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தனது 232வது திரைப்படத்தை நடிக்க உள்ளார் . அனிருத் அவர்கள் இசையமைக்கும் இந்த படத்தினை கமல் அவர்களின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கிறது .

இந்த நிலையில் “கமல்ஹாசன் 232” படத்தினை குறித்த முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகவுள்ளது.அதாவது உலகநாயகனின் பிறந்தநாள் ஸ்பெஷலாக “கமல்ஹாசன் 232” படத்தின் டைட்டிலை அறிவிக்கும் டீசரை இன்று மாலை 5 மணிக்கு வெளியிட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதனால் கமல் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். மேலும் இந்த படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகைகளை தேர்வு செய்யும் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் தீபாவளிக்கு பின் இந்த படத்தின் படப்பிடிப்பை தேனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.