உக்ரைன் சிறை கைதிகள் விடுதலை..! ஆனால் ஒரு நிபந்தனை – உக்ரைன் அதிபர்

உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, உக்ரைனில் சிறையில் உள்ள கைதிகளுக்கு ராணுவ அனுபவம் இருந்தால் அவர்களை உடனே விடுதலை செய்ய தயார் என்றும், ஆனால் ஒரே நிபந்தனை விடுதலை செய்யப்படும் கைதிகள் ரஷ்யாவிற்கு எதிரான போரில் ஈடுபட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். 

உக்ரைன் மீது ரஷ்யா ராணுவம்  கடந்த 5 ஆவது நாளாக தாக்குதல் நடத்தி வருகிறது. ரஷ்ய  படைகள் உக்ரைனில்  சில நகரங்களை கைப்பற்றியுள்ளது. இதற்கிடையில், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட உக்ரைன் மக்கள் அண்டை நாடுகளுக்குத் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

இந்த தாக்குதலில் பொதுமக்கள் மற்றும் ராணுவ வீர்ரகள் என பலர் உயிரிழந்து உள்ளனர். இந்த நிலையில், உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி, உக்ரைனில் சிறையில் உள்ள கைதிகளுக்கு ராணுவ அனுபவம் இருந்தால் அவர்களை உடனே விடுதலை செய்ய தயார் என்றும், ஆனால் ஒரே நிபந்தனை விடுதலை செய்யப்படும் கைதிகள் ரஷ்யாவிற்கு எதிரான போரில் ஈடுபட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய படைகளுக்கு எதிராக ஆயுதமேந்த உக்ரைன் மக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது உக்ரைனில் சிறையில் உள்ள கைதிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.