நெட் தேர்வு முடிவுகள் ஜூலை 26, 27-ல் வெளியாகும் என பல்கலைக்கழக மானியக்குழு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசிய தகுதித் தேர்வு (யுஜிசி நெட்) முடிவுகள் வருகின்ற ஜூலை 26 அல்லது 27 ஆம் தேதிக்குள் தேசிய தேர்வு முகமையால் (என்டிஏ) வெளியிடப்படும் என்று யுஜிசி தலைவர் மமிதாலா ஜெகதேஷ் குமார் அறிவித்துள்ளார்.
தேர்வெழுதிய மாணவர்கள் தங்களது தேர்வு முடிவுகளை NTA-ன் அதிகாரப்பூர்வ இணையதளமான ugcnet.nta.nic.in என்ற வலைதளத்தில் சென்று தெரிந்து கொள்ளாலாம்.
கல்லூரிகளில் உதவி பேராசிரியராகப் பணிபுரியவும், இளநிலை ஆராய்ச்சி படிப்புக்கு மத்திய அரசின் உதவித் தொகை பெறவும் நெட் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி, கடந்த பிப்ரவரி 21 முதல் மார்ச் 10 வரை கணினி வழியில் 2 கட்டங்களாக நடந்த நெட் தேர்வுகளை 6.39 லட்சம் பேர் எழுதினர்.