இயற்கையை மீறிமல் கதைகளத்தை காட்சிப்படுத்தும் தமிழ் சினிமா இயக்குனர்களில் ஒருவரான சீனு ராமசாமி இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம் ‘கண்ணே கலைமானே’ இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின் கதாநாயகனாகவும், தமன்னா ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தான் தயாரித்தும் உள்ளார்.

கவிப்பேரரசு பாடல்கள் எழுத யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இன்று இப்படம் உலகம் முழுவதும் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இப்படம் தமிழ்நாட்டில் மட்டுமே 325 திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது. இந்த தியேட்டர் விபரங்களை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது.

DINASUVADU