ஆன்லைன் வகுப்பு கற்க செல்போன் வாங்க பணமில்லாததால் சாக்கடை அள்ளிய மாணவிக்கு லேப்டாப் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்!

ஆன்லைன் வகுப்பு கற்க செல்போன் வாங்க பணமில்லாததால் சாக்கடை அள்ளிய மாணவிக்கு லேப்டாப் வழங்கிய உதயநிதி ஸ்டாலின்!

ஆன்லைன் வகுப்பில் கலந்துகொள்ள செல்போன் வாங்க பணம் இல்லாததால் சாக்கடை அள்ளி பணம் சம்பாதித்த மாணவனுக்கு உதவிய உதயநிதி ஸ்டாலின்.
தமிழகம் முழுவதிலும் கொரானா வைரஸின் தீவிரம் அதிகரித்துக்கொண்டே சென்றாலும் தற்போது மாணவர்களின் படிப்பு கெட்டு விடக்கூடாது என்பதற்காக அரசாங்கம் ஆன்லைன் மூலமாக பாடங்களை நடத்தலாம் என அனுமதி அளித்துள்ளது. அதன்படி அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிளிலும் ஆன்லைன் மூலமாக தற்பொழுது பாடங்கள் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இதனால், நடுத்தர குடும்பத்தினராக இருந்தாலும் அவர்களிடம் ஸ்மார்ட்போன் இல்லாவிட்டாலும் பாடம் கற்க வேண்டும். எனவே, தற்பொழுது ஸ்மார்ட்போன் அவசியம் என்ற ஒரு நிலை வந்துள்ளது.
இந்நிலையில் சென்னை அருகே உள்ள கொடுங்கையூர் பகுதியை சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கக்கூடிய மாணவர் ஒருவர் செல்போன் இல்லாததால் அதற்கான பணத்தை சம்பாதிக்க கோயம்பேடு அருகே உள்ள வடிகால் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான செய்திகளும் புகைப்படங்களும் சமூகவலைதளத்தில் பரவி சோகத்தை ஏற்படுத்தியது. இதை அறிந்த திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், இளைஞரணி சார்பில் சென்னை கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சேகர் பாபு அவர்களது ஏற்பாட்டில் நடைபெற்ற கழகத்தின் மூத்த முன்னோடிகளுக்கான விழாவில் அந்த மாணவருக்கு லேப்டாப் பையும் அதற்கான டேட்டாவையும் வழங்கியுள்ளார். இதனால் உதயநிதி ஸ்டாலினுக்கு சமூக வலைதளங்களில் தற்போது பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

Latest Posts

#IPL2020: டாஸ் வென்ற பெங்களூர் அணி பேட்டிங் தேர்வு ! சென்னை அணியில் இரண்டு மாற்றங்கள்
மற்றவர்களை பேச விடாமல் பேசுவது நீங்கள் தான்.! அனிதாவை வறுத்தெடுக்கும் உலகநாயகன்.! 
பண்டிகை காலங்களில் படம் வெளியாவதில் அரசு தடை இல்லை - கடம்பூர் ராஜூ
#HeavyRain: தமிழகத்தின் 7 மாவட்டங்களில் கனமழை - வானிலை ஆய்வு மையம்
மாசு கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறினால் ரூ.1.21லட்சம் அபராதம்.! டெல்லி அரசு அதிரடி.!
ஹைதராபாத் உழவர் சந்தைகளில்ஒரு கிலோ வெங்காயம் ரூ .35க்கு விற்பனை.!
பயனாளர்களுக்கு அதிர்ச்சி..! இந்த சேவைக்கு இனி கட்டணம்..!
திருமாவளவனை கண்டித்து பாஜக மகளிர் அணி போராட்டம் - எல்.முருகன்
"சூரரை போற்று" படத்தின் டிரைலர் ரிலீஸ் தேதி அறிவிப்பு.!
நவம்பர் 6 முதல் டிசம்பர் 6 வரை வேல் யாத்திரை- எல்.முருகன்..!