தமிழகத்தில் இரு சூரியன்கள் – தருமபுரம் ஆதீனம்

தமிழகத்தின் ஆளுநரும் சூரியன், தமிழ்நாட்டை ஆள்பவர்களின் சின்னமும் சூரியன் என தருமபுரம் ஆதீனம் பேச்சு.

தருமபுரம் 27-வது ஆதீன நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழக ஆளுநர் ஆர்என் ரவி இன்று காலை மயிலாடுதுறை மாவட்டம் தருமபுரம் சென்றுள்ளார். அங்கு அவருக்கு ஆதினம் சார்பில் பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டது. இதன்பின் ஞானரத யாத்திரையை ஆளுநர் ஆர் என் ரவி தொடங்கி வைத்தார்.

தருமபுரத்தில் இருந்து தெலுங்கானா செல்லும் ஞானரத யாத்திரை, அங்கு நடைபெற உள்ள புஷ்கர விழாவில் பங்கேற்கவுள்ளது. இதனிடையே, தமிழ்நாட்டில் இரு சூரியன்கள் இருக்கின்றன. ரவி என்றால் சூரியன் என்று பொருள், இது ஒரு தெய்வ செயல். எனவே, தமிழ்நாட்டின் ஆளுநரும் சூரியன், தமிழ்நாட்டை ஆளுபவர்களின் சின்னமும் சூரியன் என தருமபுரம் ஆதீனம் தெரிவித்தார்.