1 கோடி மதிப்புள்ள..600 கிராம் பாம்பு விஷத்தை கடத்த முயன்ற இருவர் கைது.!

மேற்கு வங்காளத்தின் மால்டா மாவட்டத்தில் பாம்பு விஷத்தை ஒரு சர்வதேச மோசடி கடத்தல் கடந்த வெள்ளிக்கிழமை நடந்துள்ளது. மேலும் மாநில சிஐடி மற்றும் போலீசாரின் முக்கிய நடவடிக்கையில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.

பாக்குஹோட் பெட்ரோல் பம்ப் பகுதியில் உள்ள ஒரு காரில் இருந்து சுமார் 1 கோடி ரூபாய் மதிப்புள்ள 600 கிராம் பாம்பு விஷத்தை பமோங்கோலா காவலர்கள் பறிமுதல் செய்தனர்.

இந்த சோதனையில் இரண்டு பபேர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். அவர்கள் தட்சின் தினாஜ்பூர் மாவட்டத்தில் கங்கராம்பூர் பகுதியில் வசிக்கும் ஆலம் மியான் மற்றும் முஸ்பிக் ஆலம் என தெரிய வந்துள்ளது.

பாம்பு விஷம் புல்லட் ப்ரூஃப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்தது. விஷத்தை கடத்த இருவரும் மால்டாவுக்கு சென்று கொண்டிருந்ததாக போலீசாருக்கு ஒரு தகவல் கிடைத்தது, இதனையடுத்து இந்தியா-பங்களாதேஷ் எல்லையில் உள்ள மால்டா மாவட்டம்  அருகில் காரை நிறுத்தி கைது செய்ததாக  பொலிஸார் தெரிவித்தனர்.

author avatar
கெளதம்
நான் கௌதம், வணிகவியல் இளங்கலை பட்டம் முடித்திருக்கிறேன். டிஜிட்டல் செய்தி ஊடகத்தின் மீது ஆர்வம் கொண்ட காரணத்தினால் கடந்த 4 ஆண்டுகளாக தினச்சுவடு ஊடகத்தில் சினிமா, உலக செய்திகள், க்ரைம், லைப் ஸ்டைல், பொதுச் செய்திகள் எழுதிய அனுபவம்.