,

மாஸ் காட்டிய TVS: இனி ஷோரூம்க்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை.. அட ஆமாங்க!

By

நாம் ஷோரூம் செல்லும் நேரத்தை குறைக்கும் விதமாக டி.வி.எஸ்.நிறுவனம், தனது A.R.I.V.E செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன்மூலம் நான் ஷோரூமில் இருக்கும் அனுபவத்தை தரும்.

சென்னையை தலைமை இடமாக கொண்ட டிவிஎஸ் நிறுவனம், தங்களின் வாடிக்கையாளர்களின் நேரத்தை மிச்சப்படுத்தவும், வாகனம் வாங்குவதை எளிமையாகவும் ஒரு அறிமுகப்படுத்தியது. அது, Augmented Reality Interactive Vehicle Experience (A.R.I.V.E). இந்த செயலி மூலம் வாடிக்கையாளர்கள் நேரடியாக ஷோரூமிற்கு வந்து வாகனத்தை பார்ப்பதற்கு பதில், தங்களின் வீட்டில் இருந்தே தங்களுக்கு தேவையான பைக்குகளை பார்த்துக்கொள்ளலாம். இந்த செயலி மூலம் வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக ஷோரூமில் இருப்பது போன்ற அனுபவத்தை கொடுக்கும்.

இந்த செயலியில் டிவிஎஸ் நிறுவனத்தின் அனைத்து வாகனங்களும் இருக்கும். அந்த வாகனத்தை கிளிக் செய்தால், அந்த வாகனம் பற்றிய அனைத்து தகவல்கள் பட்டியலிடப்பட்டிருக்கும். இதனால் அந்த வாகனத்தை பற்றி பரப்பப்படும் போலி தகவல்களை தவிர்க்கலாம். மேலும், ஒரு வாகனத்தை நேரில் சுற்றிப்பார்த்தால் எப்படி இருக்குமோ, அதேபோன்று 360 டிகிரியில் பார்வையிடும் வசதியும் இந்த செயலியில் இருக்கின்றது.

அதுமட்டுமின்றி, டெஸ்ட் டிரைவினை புக் செய்யும் வசதியும் இந்த செயலியில் கொடுக்கப்பட்டுள்ளது.வாகனத்தை டெஸ்ட் ட்ரைவ் செய்து பார்க்கவேண்டுமானால், கண்டிப்பாக ஷோரூம்-க்கு செல்லவேண்டும் என அந்நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது கொரோனா பரவல் காரணமாக டீலர்கள் பலர், டெஸ்ட் ட்ரைவ் செய்யும் வசதியை எளிமையாக்க, வீடு தேடி வந்து வாகனத்தை தருகிறார்கள் என்பது குறிப்பிடத்தகுந்தது.

Dinasuvadu Media @2023