தூத்துக்குடியில் பனிமயமாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!

தூத்துக்குடியில் உள்ள பனிமயமாதா ஆலயம் போர்ச்சுகீசியர்கள் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த ஆலயம் ஆகும்.  இந்த பழமை வாய்ந்த இந்த ஆலயத்தின் 437-ம் ஆண்டு திருவிழா இன்று காலை 7:30 மணியளவில் கொடியேற்றத்துடன் துவங்கியுள்ளது.

இந்த திருவிழாவின் திருப்பலி தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் இவோன் அம்புரோஸ் தலைமையில் நடைபெற்றது. இந்த விழா இன்றிலிருந்து தொடர்ந்து 10 நாட்கள் கோலாகலமாக நடைபெற உள்ளது. இதனையடுத்து, இந்த விழாவை முன்னிட்டு 1200 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.