துருக்கி நிலநடுக்கம் : பலி எண்ணிக்கை 62-ஆக உயர்வு!

துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 62 ஆக உயர்வு. 

துருக்கியின் மேற்கு பகுதியில் உள்ள ஏகன் தீவு பகுதியில், கடந்த சில நாட்களுக்கு முன்பதாக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில், 7.0 என பதிவாகியுள்ளது. அங்கும் சிறிய அளவிலான சுனாமி பாதிப்பும் ஏற்பட்ட நிலையில், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் கட்டடங்கள் எல்லாம் சரிந்து விழுந்துள்ளது.

இந்த இயற்கை சீற்றத்தால், இஸ்மியர் நகரமானது மிகப்பெரிய அளவிலான பாதிப்பை சந்தித்துள்ளது. தற்போது இந்த இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 200-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாகவும் துருக்கி பேரழிவு மற்றும் அவசரநிலை மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், இடிபாடுகளில் சிக்கியவர்கள் உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக, சுகாதார மைச்சர் பஹ்ரெடின் கோகா தெரிவித்துள்ளார். இஸ்மீயர் நகரத்தின் மேயர் அவர்கள் இதுகுறித்து கூறுகையில், மாகாணம் முழுவதும் 400 கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

மேலும் இஸ்மியர் நகராட்சி மையத்தில், பல நிறுவப்பட்டுள்ளதாகவும், இந்த கூடாரத்தில் உணவு மற்றும் பிற பொருட்கள் தேவைப்படுவோருக்கு விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.