இனிமேல் வீட்டில் தேங்காய் சட்னியை இப்படி செய்து பாருங்கள்!

தோசை மற்றும் இட்லிக்கு மட்டுமல்லாமல் லெமன் சாதம், தயிர் சாதம் போன்ற மற்ற பிற உணவுகளுக்கும் தேங்காய் சட்னியை பயன்படுத்துவது பலருக்கும் பிடித்த ஒன்று. இந்த தேங்காய் சட்னியை எப்படி அட்டகாசமான சுவையுடன் வீட்டிலேயே செய்யலாம் எனபர்களாம் வாருங்கள். 

தேவையான பொருள்கள்

  • தேங்காய்
  • பொட்டு கடலை
  • பச்சை மிளகாய்
  • காய்ந்த மிளகாய்
  • புளி
  • உப்பு
  • சின்ன வெங்காயம்
  • கருவேப்பில்லை
  • கடுகு

செய்முறை

முதலில் ஒரு மிக்சி ஜாரில் தேங்காயை துண்டுகளாக நறுக்கி போட்டு கொள்ளவும். அதனுடன் ஒரு துண்டு புலி, பொட்டு கடலை ஒரு கைப்பிடி, ஒரு சின்ன வெங்காயம், ஒரு பச்சை மிளகாய் லேசாக உப்பு ஆகியவை சேர்த்து நன்றாக அரைக்கவும்.

பின் ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கருவேப்பில்லை மற்றும் காய்ந்த மிளகாய் ஆகியவை சேர்த்து தாளிக்கவும். அதன் பின் அரைத்து வைத்துள்ள தேங்காயை இந்த தாளிப்பில் ஊற்றி லேசாக தண்ணீர் சேர்த்து உப்பின் அளவை சோதித்து கொஞ்சம் சூடேறியதும் இறக்கி விடவும். அட்டகாசமான தேங்காய் சட்னி வீட்டிலேயே தயார்.

author avatar
Rebekal