திருப்பதி தேவஸ்தானம் தலைவர் இந்துவா..?கிறிஸ்தவரா..?சர்ச்சையை கிளப்பிய விவகாரம்

திருப்பதி தேவஸ்தானம் தலைவர் இந்துவா..?கிறிஸ்தவரா..?சர்ச்சையை கிளப்பிய விவகாரம்

திருமலை திருப்பதி தேவஸ்தானம் புதிய தலைவர் நியமனம் விவகாரம் பெறும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திராவில் ஜெகன் மோகன் தலைமையில் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் உலகபுகழ் பெற்ற திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய தலைவராக அம்மாநில முதல்வரின் நெருங்கிய உறவினர் சுப்பா ரெட்டி  நியமிக்கப்ட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ள நிலையில் அவருடைய மதம் குறித்து பல சர்ச்சைகளை ஏற்படுத்தி உள்ளது.
Image result for TIRUPATI SUBBA REDDY
தற்போது தேவஸ்தானத்தின் தலைவராக உள்ள புட்டா சுதாகர் யாதவின் பதவிக் காலம் முடிவடைய உள்ள நிலையில் புதிய தலைவராக ஜெகன் மோகன் ரெட்டியின் நெருங்கிய உறவினர் ஆன சுப்பா ரெட்டி நியமிக்க அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் அவர் கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவர் என்று சர்ச்சை வளைதலங்களில் எழுந்தது மேலும் யாரோ ஒருவர்  அவரை பற்றி விக்கிபீடியா வளைதலப் பதிவை மேற்கோள் காட்டி மதம் மாறிய  கிறிஸ்தவர் என்று குறிப்பிட்ட நிலையில் ,சற்று நேரத்தில் மதம் குறித்த விக்கிபீடியாவில் இருந்து தகவல் நீக்கப்பட்டது.
மேலும் இதனால் வீக்கிபீடியாவின் பக்கம் 100 முறை மாறி ,மாறி திருத்தம் செய்யப்பட்டு மாற்றியமைக்கப்பட்டது.
மேலும் இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் சமுக வலைதளங்களில் சுப்பா ரெட்டி கோபூஜையின் போது எடுத்த புகைபடங்கள் உலா வருகின்றது.
இவர் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தாயாரின் சகோதரியை திருமணம் செய்து கொண்டவர்.மேலும் இவர் ஒரு பக்கா இந்து என்று பாஜக மூத்த தலைவர் சுப்ரமணியசாமி தெரிவித்துள்ளார்.
திருப்பதி தலைவர் பதவி விவகாரத்தில் மதம் குறித்த சர்ச்சை எழுந்துள்ளது மக்கள் இடையே சற்று சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது நாடும் முழுதும் பெறும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது.மேலும் இந்த விவகாரத்திற்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

author avatar
kavitha
Join our channel google news Youtube