அமெரிக்க தலைநகர்  நியூயார்க் நகரில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் அதிபர் டொனால்ட் டிரம்புக்கு சொந்தமான 66 மாடி குடியிருப்புக் கட்டிடம் உள்ளது. அவர் அதிபராக பொறுப்பேற்று, வெள்ளை மாளிகையில் குடியேறும் முன்னர், டிரம்ப் டவர் எனப்படும் இந்த கட்டிடத்தில்தான் டொனால்ட் டிரம்ப் வசித்து வந்தார். இந்நிலையில், டிரம்ப் டவரின் மாடியில் பொருத்தப்பட்டுள்ள மின்சாதனப் பொருட்களில் தீவிபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் 3 பேர் காயமடைந்த நிலையில், விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இந்த தீவிபத்துக்கு மின்கசிவே காரணம் என அதிபர் டிரம்பின் மகன் எரிக் டிரம்ப் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

source: dinasuvadu.com