தேர்தல் முடிவை மாற்றுமாறு தேர்தல் அதிகாரியை மிரட்டிய ட்ரம்ப்! வெளியான ஆடியோ!

தேர்தல் முடிவை மாற்றுமாறு தேர்தல் அதிகாரியை மிரட்டிய ட்ரம்ப்! வெளியான ஆடியோ!

சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தொலைபேசி உரையாடல் நடந்துள்ளது. இந்த உரையாடலின் போது ட்ரம்ப், தேர்தல் ஆணையருக்கு அழுத்தம் கொடுக்கும் விதத்தில் பேசியுள்ளார்.

அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் 3-ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் குடியரசு கட்சி சார்பில் ஜோ பைடனும், குடியரசு கட்சி சார்பில் டொனால்ட் திறம்பும் போட்டியிட்டனர். இதில், ஜனநாயக கட்சியை சேர்ந்த ஜோ பைடன் வெற்றி பெற்றார். இவர் வரும் 20ஆம் தேதி பதவியேற்க தயாராகி வரும் நிலையில், தற்போதைய அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் பிடிவாதம் பிடித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த சனிக்கிழமை அன்று ஜார்ஜியா மாகாண தலைமை தேர்தல் ஆணையரிடம் பேசியுள்ளார். சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தொலைபேசி உரையாடல் நடந்துள்ளது. இந்த உரையாடலின் போது ட்ரம்ப், தேர்தல் ஆணையருக்கு அழுத்தம் கொடுக்கும் விதத்தில் பேசியுள்ளார். தலைமை தேர்தல் அதிகாரி பிராட் ரபென்ஸ்பெர்ஜருடன் பேருடன் ஒட்டு கேட்டதுடன் பதிவு செய்யப்பட்டுள்ளது.

டொனால்டு ட்ரம்ப், ஜார்ஜியாவில் சுமார் 11 ஆயிரத்து 780 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவினார். குடியரசு கட்சியின் கோட்டை என வர்ணிக்கப்படும் ஜார்ஜியாவில் இப்படி நடந்திருக்க சாத்தியமே இல்லை. எனவே, இந்த 11 ஆயிரம் வாக்குகள் எப்படி வந்தன என்பது பற்றி மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

டொனால்ட் ட்ரம்பின் இந்த கோரிக்கையை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை துல்லியமாகவும் நேர்மையாகவும் நடந்துள்ளது என தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.
Join our channel google news Youtube