“நான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்.. ஆனால் ஒரு கண்டிஷன்” – டிரம்ப்!

அதிபர் தேர்தலில் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாத டிரம்ப், “நிச்சியமாக நான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன்” என கூறினார்.

உலகமே எதிர்பார்த்துக் கொண்டிருந்த அமெரிக்க தேர்தல் முடிவுகளில் ஜோ பைடன், 290 சபை ஓட்டுக்களை பெற்று அமெரிக்காவின் 46 வது அதிபராக தேர்வாகியுள்ளார். அதனைதொடர்ந்து, அதிபரை தேர்வு செய்வதற்கு எலக்டோரல் காலேஜ் எனப்படும் தேர்வாளர் குழுவின் 270 உறுப்பினர்களின் வாக்குகளை பெற வேண்டும். அதில் பைடன் 306 வாக்குகளும், டிரம்ப் 232 வாக்குகளும் பெற்றார். ஜோ பைடன், ஜனவரி 20, 2021-ல் முறைப்படி அதிபராக பதவியேற்க உள்ளார்.

இந்த தேர்தலில் தோல்வியடைந்ததை ஒப்புக்கொள்ளாத டிரம்ப், தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக தொடர்ந்து முறைகேடுகள் வைத்து வருகிறார். இந்தநிலையில் தேர்தலில் தோல்வியடைந்த பின் முதல் முறையாக டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது அவரிடம் அதிபர் பைடன் என தேர்வாளர் குழு சான்றளித்து விட்டால், நீங்கள் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவீர்களா? என செய்தியாளர் ஒருவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

அதற்கு பதிலளித்த டிரம்ப், அதற்கு பதிலளித்த டிரம்ப், நிச்சியமாக, நான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன் என கூறிய அவர், பைடனின் வெற்றியை அங்கீகரித்தால் அவர்கள் பெரிய தவறை செய்வார்கள் என உரையாற்றினார். தற்போது முதல் ஜனவரி 20 ஆம் தேதிக்குள் நிறைய விஷயங்கள் நடைபெறும் என குறிப்பிட்ட டிரம்ப், பெரிய அளவில் நடந்த முறைகேடுகள் கண்டறியப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.