ட்ரம்ப் உத்தரவை தற்காலிகமாக நிறுத்திவைக்க உத்தரவு..!

அமெரிக்காவில் கடந்த ஆகஸ்ட் 6-ம் தேதி அதிபர் ட்ரம்ப் வீ சாட் தடை செய்ய  உத்தரவை பிறப்பித்தார். அதன்படி கொடுக்கப்பட்ட 45 நாள் அவகாசம் ஞாயிற்றுக்கிழமையுடன் (நேற்று ) முடிவந்தடைந்த நிலையில், தேசப் பாதுகாப்பு கருதி இந்த செயலிகளுக்கு தடை விதிப்பதாகவும் இந்தத் தடை உத்தரவு நேற்று இரவு முதல் நடைமுறைக்கு வரவிருப்பதாக சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்து இருந்தது.

இந்நிலையில், வீ சாட்டை தடை செய்வதற்கான ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாக உத்தரவை ஒரு அமெரிக்க நீதிபதி தற்காலிகமாக நிறுத்தியுள்ளார். சான் பிரான்சிஸ்கோவில் உள்ள மாஜிஸ்திரேட் நீதிபதி லாரல் பீலர் ஞாயிற்றுக்கிழமை உத்தரவு பிறப்பித்தார். மூன்று நாட்கள் தொடர்ச்சியான விசாரணைகளுக்குப் பிறகு இந்த உத்தரவு வந்தது.

author avatar
murugan