விறுவிறுவென முன்னேறும் ட்ரம்ப்.! அனல் பறக்கும் வாக்கு எண்ணிக்கை.! வெற்றி யாருக்கு.?

அமெரிக்கா அதிபர் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை அனல் பறக்கும் வேகத்தில் எண்ணப்பட்டு வருகிறது. 

ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சி வேட்பாளர் ட்ரம்ப் ஆகிய இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. ஆனால், ஆரம்ப முதலே ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் முன்னிலை பெற்று வருகிறார். ரொனால்ட் டிரம்ப் தொடர்ந்து பின்னடைவை சந்தித்து வருகிறார்.

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி ரொனால்ட் டிரம்ப் விறுவிறுவென முன்னேறி 213 சபை ஓட்டுகளை பெற்றுள்ளார். எனினும், ஜோ பைடன் 224 சபை ஓட்டுகளை பெற்று முன்னிலை வகிக்கிறார். இதில் பல்வேறு மாகாணங்களில் வெற்றி அறிவிக்கப்பட்டு வருகிறது.

அனல் பறக்கும் வாக்கு எண்ணிக்கையில் ட்ரம்ப் பின்னடைவில் இருந்தாலும் தற்போதைய வேகத்தை பார்த்தால் முடிவு எப்படி வரும் என்று ஆவலாக எதிர்பார்க்கப்படுகிறது. ஆதலால் யார் வெற்றி பெறுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 270 சபை ஓட்டுகளை பெற்றால் வெற்றி என்று குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்