டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்த ட்ரூடோவின் கருத்துக்கள் – கனட தூதரை அழைத்து புகாரளித்த இந்தியா!

டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்த கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்த கருத்துக்கள் இருநாட்டு உறவை பாதிக்கும் என கனட தூதரை அழைத்து இந்தியா புகாரளித்துள்ளது. 

புதியதாக இந்தியாவில் கொண்டுவரப்பட்டுள்ள வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லி எல்லையில் கடந்த 9 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த விவசாயிகளின் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினர் இந்தியாவில் ஆதரவு தெரிவித்துவரும் நிலையில் வெளிநாட்டிலிரந்து ஆதரவு தெரிவித்த ஒரே பிரதமர் என்றால் அது கனடா நாட்டின் பிரதமர் தான். கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மட்டும் இது குறித்து பேசிய போது விவசாயிகளின் உரிமைகளை போராடி நிலை நாடுவதற்கு கனடா என்றுமே துணைநிற்கும் எனவும், விவசாயிகள் போராட்டம் நடத்திக் கொண்டிருப்பது தனக்கு கவலை அளிப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார். இவரது கருத்துக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வந்தனர்.

இது தொடர்பாக, மத்திய அரசு கூறுகையில் இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் ஜஸ்டின் ட்ரூடோ வின் கருத்து இருநாட்டு உறவில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் வெளியுறவுத் துறை சார்பில் கண்டனம் தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருப்பதாகவும் இந்திய வெளியுறவு துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத் துறை வெளியிட்டு இருக்கும் அறிக்கையில், கனட தூதருக்கு வெளியுறவுத் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டு உள்ளது. கனடாவின் பிரதமர் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பேசி வரும் கருத்து மூலமாக இந்தியாவின் உள்நாட்டு விவகாரத்தில் தலையிடுவதை எந்தவகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கனடா தூதரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் இருநாட்டு உறவுகளில் இது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதையும் சுட்டிக்காட்டி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

author avatar
Rebekal