காவலருக்கு கன்னத்தில் அறைந்த லாரி ஓட்டுநர்…! கைது செய்த போலீசார்…!

போக்குவரத்து காவலரை கன்னத்தில் அறைந்த லாரி ஓட்டுனரை கைது செய்த போலீசார். 

சென்னை போரூர் அருகே தவறான பாதையில் வந்ததால் போக்குவரத்து காவலர் ஒருவர் வெளிமாநில லாரி ஓட்டுனர், முஸ்தாக் அகமது என்பவரை மாற்று சாலையில் செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார். இதனால் போக்குவரத்து காவலருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட முகமது, ஒரு கட்டத்தில் காவலரை கன்னத்தில் அறைந்துள்ளார்.

மேலும், முஸ்தாக் அகமது தான் கையில் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டியுள்ளார். இதுகுறித்து போக்குவரத்து காவலர் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் அடிப்படையில் லாரி ஓட்டுனர் முஸ்தாக் அகமது கைது செய்து அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், தாக்கியது ஆபாசமாக பேசியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை சிறையில் அடைத்துள்ளனர்.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.