பெருபான்மையை தாண்டிய திரிணாமுல் காங்கிரஸ்… நந்திகிராம் தொகுதியில் மம்தா பின்னடைவு!

மேற்கு வங்க தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை தாண்டி திரிணாமுல் காங்கிரஸ் முன்னிலை பெற்றது.

மேற்கு வங்க மாநிலத்தில் மொத்தம் உள்ள 294 சட்டமன்ற தொகுதிகளில் 292 தொகுதிகளுக்கு மட்டும் எட்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் பெரும்பான்மைக்கு தேவையான இடங்களை தாண்டி முன்னிலை வகித்து வருகிறது.

அதாவது, திரிணாமுல் காங்கிரஸ் 184 இடங்களிலும், பாஜக 102 இடங்களிலும், காங்கிரஸ், இடதுசாரி கூட்டணி 2 இடங்களும், மற்றவைகள் 3 இடங்களிலும் முன்னிலை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், மேற்குவங்க நந்திகிராம் தொகுதியில் பாஜக வேட்பாளர் சுவேந்து அதிகாரி முன்னிலை பெற்று வரும் நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜி பின்னடைவை சந்தித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை சில சுற்றுகள் மட்டும் எண்ணப்பட்டுள்ள நிலையில், அடுத்தடுத்து சுற்றுகளில் எப்படி அமையும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும் என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்