தடையை மீறி இயங்கிய திருச்சி மசாஜ் சென்டர் சீல்!

உலகம் முழுவதும் பரவி வரக் கூடிய கொரோனா வைரசை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும்

By Rebekal | Published: Apr 10, 2020 11:58 AM

உலகம் முழுவதும் பரவி வரக் கூடிய கொரோனா வைரசை கட்டுப்படுத்த இந்தியா முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சமூக பரவல் ஏற்படாமல் இருப்பதற்காக அரசு எடுத்துள்ள இந்த நடவடிக்கையால் பல்வேறு கடைகள் கல்விக்கூடங்கள் ஆலயங்கள் அனைத்துமே மூடப்பட்ட நிலையில், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரலாம் என்று மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இந்நிலையில், கடைகளும், அத்தியாவசிய கடைகள், மளிகை கடை காய்கறி கடை மற்றும் பெட்ரோல் பங்க் ஆகியவைகள் இயங்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. ஆனால் தற்போது திருச்சியில் உள்ள உறையூரில் ஆயுர்வேத மசாஜ் சென்டர் இயங்கி வருவதாக மாவட்ட ஆட்சியருக்கு வந்த தகவலின் பேரில் சித்த மருத்துவ அலுவலர் காமராஜ் அந்த மசாஜ் சென்டர் சென்று சோதனை நடத்தி உள்ளார்.

அப்பொழுது ஊரடங்கு உத்தரவை மீறி உரிமை இல்லாமல் ஆயுர்வேத மசாஜ் சென்டர் நடத்தி வந்த திருச்சி மசாஜ் சென்டருக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். அதிகாரிகள் அங்கு சென்றதை அடுத்து விசாரணையின்போதே பணியில் இருந்து இரண்டு பெண்களும் தப்பி ஓடி உள்ளனர்.

Step2: Place in ads Display sections

unicc