உருமாறிய கொரோனா – ஆய்வு முடிவுகளில் தாமதம் ஏன்?

பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இது உருமாறிய கொரோனா பாதிப்பா என இதுவரை தகவல் வெளியாகவில்லை.

பிரிட்டனில் இருந்து தமிழகம் திரும்பிய 1,438 பேருக்கு பரிசோதனை செய்ததில் 13 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத்துறை தெரிவித்திருந்தது. தொற்று உறுதியானவர்கள் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பதை கண்டறிய ஆய்வு செய்வதாக தெரிவிக்கப்பட்டது. ஆய்வு முடிவுகளுக்கு 14 நாட்கள் வரை தேவைப்படுவதால் உருமாறிய கொரோனாவா என்பதை கண்டறிவதில் சிக்கல் உள்ளதாக கூறப்படுகிறது.

வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களுக்கு புதிய தொற்று உறுதியானால் மத்திய அரசே முதலில் அறிவிக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களுக்கு சிகிச்சை அளிக்க தனி வார்டுகள் அரசு மருத்துவமனையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்து வந்தவர்கள், அவர்களுடன் தொடர்பில் இருந்து தொற்று உறுதியானவர்களுக்கு கிங் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடப்படுகிறது.

author avatar
பாலா கலியமூர்த்தி
நான் பாலா கலியமூர்த்தி, இயந்திரவியல் துறையில் இளங்கலை பொறியியல் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 4 ஆண்டுகளாக தினசுவடு டிஜிட்டல் ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன். அங்கு, அரசியல், விளையாட்டு, சினிமா மற்றும் க்ரைம் செய்திகள் ஆகியவற்றை அளித்து வருகிறேன்