உத்திர பிரதேசத்தில் 2 வயது குழந்தைக்கு உருமாறிய கொரோனா தொற்று!

உத்தரப் பிரதேசத்தில் 2 வயது குழந்தைக்கு உருமாறிய கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, குழந்தையின் வீடு சீல் வைக்கப்பட்டுள்ளது. 

உத்தரப் பிரதேசத்தில் 2 வயது குழந்தைக்கு உருமாறிய கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அங்கு முதல் முதலில் உருமாறிய கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் இவர் தான். குழந்தையின் பெற்றோர் ஏற்கனவே பழைய வைரசால் பாதிக்கப்பட்ட நிலையில், குழந்தை மீரட்டில் உள்ள சுபார்தி மருத்துவக் கல்லூரியில் தனது பெற்றோர்களுடன் தனிப்பட்ட வார்டில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

உருமாறிய கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், குழந்தை மற்றும் அவரது குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் வைக்கப்பட்டுள்ளனர். குழந்தையின் குடும்பத்தினருக்கு உருமாறிய கொரோனா தொற்று உள்ளதா என கண்டறிய, அவர்களுடைய மாதிரிகள் பரிசோதனைக்காக டெல்லிக்கு அனுப்பப்பட்டு உள்ளனர். இதில் 2 வயது குழந்தைக்கு உருமாறிய கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அவருடைய வீடு தற்போது சீல் வைக்கப்பட்டுள்ளது.

author avatar
லீனா
நான் லீனா ஆங்கிலத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 5 வருடமாக தினச்சுவடு ஊடகத்தில் பணியாற்றி வருகிறேன்.தமிழ்நாடு, இந்தியா, உலகம், லைப்ஸ்டைல் போன்ற பிரிவுகளில் செய்திகளை எழுதி வருகிறேன்.