பாகிஸ்தானில் பஸ் மீது ரயில் மோதல் ! 19 பேர் உயிரிழப்பு

பாகிஸ்தானில் பஸ் மீது ரயில் மோதிய விபத்தில்  19 பேர் உயிரிழந்து உள்ளதாக

By venu | Published: Jul 03, 2020 04:13 PM

பாகிஸ்தானில் பஸ் மீது ரயில் மோதிய விபத்தில்  19 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து லாகூர் நோக்கி எக்ஸ்பிரஸ் ரயில் ஓன்று சென்று கொண்டிருந்தது.அந்த சமயத்தில் நான்கானா சாகிப் வழிபாட்டு தளத்தில் இருந்து சீக்கிய யாத்ரீகர்கள் ஒரு பேருந்தில் வந்துகொண்டிருந்தனர்.அப்பொழுது ரயில்வே கிராசிங்கை பேருந்து கடக்கும் போது எதிர்பாராத விதமாக லாகூர் நோக்கி சென்ற ரயில் மோதியது. இந்த விபத்தில் 19 பயணிகள் உயிரிழந்துவிட்டதாகவும்,8 பேர் காயம் அடைந்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Step2: Place in ads Display sections

unicc