மேற்கு வங்கத்தில் பரிதாபம்… மின்னல் தாக்கியதில் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழப்பு.!

By

WB Lightening

மேற்கு வங்க மாநிலம் மால்டாவில் மின்னல் தாக்கியதில் 3 குழந்தைகள் உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேற்கு வங்க மாநிலம் மால்டா மாவட்டத்தில் நேற்று மாலையிலிருந்தே இடியுடன் கூடிய மழை பெய்து வந்தது. அப்போது மின்னல் தாக்கியதில் 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. உயிரிழந்தவர்களில் 3 குழந்தைகளும் அடங்குவர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

பழைய மால்டா பகுதியில் ஒருவரும், கலியாசாக் பகுதியில் 6 பேரும் உயிரிழந்தனர், மேலும் 9 கால்நடைகளும் மின்னல் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக மாவட்ட நீதிபதி நிதின் சிங்கானியா தெரிவித்தார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தேவையான அனைத்து உதவிகள் வழங்கப்பட்டு வருவதாக சிங்கானியா கூறினார்.