400 கிலோ பளு தூக்கும் போட்டிக்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!

400 கிலோ பளு தூக்கும் போட்டிக்கு சென்ற இளைஞனுக்கு நேர்ந்த சோகம்!

ரஷ்யாவில் 400 கிலோ எடையுள்ள பளுவை தூக்கும் போட்டியில் கலந்துகொண்டவரின் முழங்கால் சவ்வு கிழிந்தது.

ரஷ்யாவை சேர்ந்த அலெக்சாண்டர் செடிக் என்ற பளு தூக்கும் வீரர் ஐரோப்பிய சாம்பியன்ஷிப் பளுதூக்கும் போட்டியில் 400 கிலோ எடை கொண்ட பளுதூக்கும் போட்டியில் கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது அவர் 400 கிலோ எடையுள்ள பளுவை தூக்கும் போது முழங்கால் எலும்பில் உடைவு ஏற்பட்டதால், அலெக்சாண்டர் வலியில் துடிதுடித்து அழுதுள்ளார். உடனடியாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு குவாட்ரைசெப்  எனும் தசைகள் கிழிந்துள்ளதாகவும், இணைக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

6 மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரிடம் பேசிய மருத்துவர்கள், இரண்டு மாதங்கள் முழுமையாக ஓய்வெடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் எந்த ஒரு கடினமான வேலையிலும் ஈடுபட கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளனர். அவர் இரண்டு மாதம் கழித்து நடக்கும்பொழுது கால்களை வேகமாக அசைக்க கூடாது எனவும் தெரிவித்துள்ளனர். இவர் மீண்டும் பளுதூக்கும் போட்டியில் கலந்து கொள்ள முடியுமா என்பது இரண்டு மாதங்களுக்கு பிறகுதான் தெரியவரும் எனவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

author avatar
Rebekal
Join our channel google news Youtube