வரியும் பெற்றுக் கொண்டு இலவசமாக வழங்க வேண்டிய குடிநீரை வியாபாரம் செய்வது ஏற்றுக் கொள்ள முடியாதது என விஜயகாந்த் கண்டனம்.
ஆவின் நிறுவனம் சார்பில் குடிநீர் விற்கும் திட்டத்திற்கு கண்டனம் தெரிவித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், வரியும் பெற்றுக் கொண்டு இலவசமாக வழங்க வேண்டிய குடிநீரை வியாபாரம் செய்வது ஏற்றுக் கொள்ள முடியாதது. தமிழக அரசு இத்திட்டத்தை உடனடியாக கைவிட்டு, குடிநீர் தட்டுப்பாட்டை நீக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் ஆவின் குடிநீர் பாட்டில்களை விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டு,ஒப்பந்தப் புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட குடிநீரை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கவேண்டியது அரசின் கடமை. அவ்வாறு செய்யாமல் குடிநீரை பாட்டிலில் விற்பனை செய்ய திட்டமிட்டிருப்பது எந்த வகையில் நியாயம்?’ என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆவின் குடிநீர் பாட்டில்களை விநியோகம் செய்ய திட்டமிடப்பட்டு,ஒப்பந்தப் புள்ளி வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாக்கப்பட்ட குடிநீரை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கவேண்டியது அரசின் கடமை. அவ்வாறு செய்யாமல்
குடிநீரை பாட்டிலில் விற்பனை செய்ய திட்டமிட்டிருப்பது எந்த வகையில் நியாயம்? pic.twitter.com/pfRz9PzBbI— Vijayakant (@iVijayakant) May 23, 2023